Local

புத்தளம் பகுதியில் திடீரென இறந்து கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்

புத்தளம் பகுதியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாகவே மீன்கள் உயிரிழப்பு விகிதம் அதிகரித்து செல்வதாகவும் இது தொடர்பில் யாரும் கவனத்தில் எடுக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அப்பகுதி அதிகமான துர்நாற்றம் வீசுவதோடு, மீன்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தையும் கண்டறிவதோடு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Oruvan

சுகாதார பிரச்சினைகள்

தற்போது அதிகமான துர்நாற்றம் காரணமாக குறித்த பகுதியில் வாழ் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அவ்வழியே செல்லும் பாடசாலை மாணவர்களும் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மீன்கள் உயிரிழந்து அழுகிய நிலைக்கு செல்வதால் அதிகமான ஈடுக்கள் அந்த பகுதியில் நிறைந்துள்ளது. இதனால் பல சுகாதார பிரச்சினைகள் எழுவதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றர்.

மீனவ தொழில் பாதிப்பு

காரணம் என்னவென தெரியாமல் குறித்த பகுதியில் மீன்பிடிக்கவும் மீனவர்கள் அஞ்சுகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக இவர்களின் வாழ்வாதாரமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் விரைவாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேச வாழ் மக்கள் மற்றும் மீனவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading