Local

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்!

ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அளவில் பெரியது என்றாலும் இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இது செப்டம்பர் 14ஆம் திகதி பூமியைக் கடந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

இது குறித்து நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கையில்,

சிறுகோள் அளவில் பெரியது தான். ஆனால் இது பூமியின் மீது மோத வாய்ப்பில்லை.

அதாவது விண்கல்லின் அளவு மற்றும் பூமிக்கு அருகாமையில் செல்லும் தூரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதன் அபாயத்தை நாசா கணக்கிடுகிறது.

அதன்படி விண்கல் 2020 கியூஎல் 2 நாசாவால் அபாயகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.

இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதுகின்றன. ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று நாசா கூறியுள்ளது,

இந்த விண்கல் பயணித்து வரும் பாதையை கருத்தில் கொண்டு – இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.

பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்வதாகவும், அடுத்த 100 ஆண்டுகளில் விண்கல் மோதும் அச்சுறுத்தல் இல்லை என்றும் சமீபத்தில் நாசா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading