Cinema

பெண் உயிரிழப்பு! புஷ்பா 2 நடிகர் கைது!

சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் 2021ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. படத்தின் 2வது பாகம் உலகம் முழுவதும் கடந்த 5ம் திகதி 12 ஆயிரம் வெளியானது.

புஷ்பா – 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4ம் திகதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா தியேட்டருக்கு வந்திருந்தனர்.

படத்தை விட இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கரகோஷம் என நிலைமை எல்லை மீறி போக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேறு வழியின்றி தடியடி நடத்த ஆரம்பித்தனர்.

குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது அங்கும் இங்கும் ஓடிய ரசிகர்கள், இருவர் மீதும் ஏறி மிதித்ததில் படுகாயமடைந்தவர்கள், மூச்சுப் பேச்சின்றி சுயநினைவை இழந்து உயிர்ழந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜூன், திரையரங்க உரிமையாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. அதனால் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, ரத்து செய்யக்கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இன்று நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading