Gossip

பெண் பொலிஸ் காதலியை சகோதரருடன் சேர்ந்து கற்பழித்த காதலன்!

மத்தியபிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் வேலை பார்த்து வந்தார். 30 வயதான அவருக்கு வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலம் ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவருடன் நீண்டகாலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் ஆண் நண்பரின் சகோதரருக்கு பிறந்தநாள் விழா நடந்தது. விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனவே அந்த நபர் பெண் போலீசை விருந்துக்கு வரும்படி அழைத்தார். அதன் படி அவரும் விருந்துக்கு வந்தார்.

அப்போது அந்த வாலிபர் அவருடைய சகோதரர் மற்றும் 2 பேர் பெண் போலீசை கற்பழித்தனர். அதனை ஆபாசமாக படம் பிடித்தனர். இதற்கு அந்த வாலிபரின் தாயாரே உடந்தையாக இருந்தார். பின்னர் ஆபாச படத்தை காட்டி மிரட்டலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் 16 வயது தலித் பெண்ணை கற்பழித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சம்பவத்தன்று இரவு அந்த பெண் வீட்டின் முன் இருந்த கொட்டகையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது அதேபகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் சிறுமியை தனது வீட்டுக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading