பேச்சுவார்த்தை தோல்விக்கு அமெரிக்காவே காரணம் ஈரான் அறிவிப்பு!!
பாகிஸ்தானில் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கு அமெரிக்காவே முழுமுதற் காரணம் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) சாடியுள்ளார். மாஸ்கோவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள ஈரானிய அரசு ஊடகங்களிடம் பேசுகையில், பிராந்திய விவகாரங்களில் அமெரிக்காவின் தேவையற்ற தலையீடுகளும் பிடிவாதமான போக்கும் அமைதி முயற்சிகளைச் சீர்குலைப்பதாகக் குற்றம்சாட்டினார். ரஷ்ய அதிகாரிகளுடன் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வரும் வேளையில், பாகிஸ்தான் தொடர்பான இந்த முக்கிய அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.