Local

பேய்க்கு பயந்தால் மயானத்தில் வீடு கட்டுவோமா? மஹிந்தவை சீண்டுகிறார் தயாசிறி!

” பேய்க்கு பயந்தால், மயானத்தில் வீடு கட்டுவோமா?” என வினா தொடுத்து மஹிந்த அணியை சீண்டியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர.

குருணாகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எந்தக்கட்சியை சார்ந்தவர் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

” அதை அவரிடம்தான் ( மஹிந்த) கேட்கவேண்டும்.  சுதந்திரக்கட்சியை விட்டு தான் இன்னும் விலகவில்லை என கூறுகிறார். பிறகு, வேறு விதத்திலும்  கருத்து வெளியிடுகின்றார்.

கடந்ததேர்தலின்போது நாம் புறக்கணிக்கப்பட்டோம். சாந்த பண்டார தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால், இனி அவ்வாறு செய்யமுடியாது.  கூட்டணி அமைத்து வெற்றி நடையில் பயணிப்போம்.

பேய்களுக்கு பயந்தால் மயானத்தில் வீடுகட்டுவோமா?” என்றார்.

அதேவேளை, கண்டி தலதாமாளிகைக்கு இன்று பயணம் மேற்கொண்ட தயாசிறி மகாநாயகக் தேரர்களை சந்தித்து  ஆசிபெற்றார். சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணையுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்தார்.

அத்துடன், சந்திரிக்கா அம்மையார் கட்சியை உடைக்கமாட்டார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

 

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading