Local

பேஸ்புக் ஊடாக நண்பர்களைத் திரட்டி போதைப்பொருள் விருந்து! – 35 பேர் கைது; இரத்தினபுரியில் சம்பவம்

பேஸ்புக் ஊடாக நண்பர்களை ஒன்றுதிரட்டி, போதைப்பொருள் விருந்தளிக்கும் நிகழ்வொன்றை ஏற்பாடுசெய்த குழுவினரும், அதில் பங்கேற்றவர்களும் இரத்தினபுரி பொலிஸாரால் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


35 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர் என்றும், இதில் கர்ப்பிணி பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் சனிக்கிழமை இரவு ஆரம்பமாகியுள்ள போதைப்பொருள் விருந்து நேற்று இரவுவரை தொடர்ந்துள்ளது.

அப்பகுதியில் வசித்த மக்களுக்கு இது பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்துள்ளனர். இதையடுத்து ஹோட்டலை சுற்றிவளைத்த பொலிஸார், முகாமையாளரையும் பங்குபற்றியவர்களையும் கைதுசெய்துள்ளனர்.

ஐஸ் என்ற போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளனர் என்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading