World

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை செய்ய வேண்டும் என மெட்டா நிறுவனம் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமானது தற்போது புதிய அறிவிப்பை தங்கள் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

அதன் படி தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் செப்டம்பர் 5 முதல் வாரத்தில் 3 நாட்கள் அவரவர்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு நேரில் சென்று வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானாது, அலுவலத்தில் நேரடியாக வேலை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், ஏற்கனவே, வீட்டில் இருந்து வேலை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மெட்டா நிறுவனமானது கடந்த 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. அதே போல, இந்தாண்டு துவக்கத்தில் 10 ஆயிரம் ஊழியர்கள் என மொத்தமாக 21 ஆயிரம் ஊழியர்களை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading