LocalUp Country

பொதுத்தேர்தலைகோரி மஹிந்த அணி கையெழுத்து வேட்டை !

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வைக்காண்பதற்காக உடனடியாக பொது தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று கையெழுத்துவேட்டை நடத்தப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்புவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கையொப்பம் திரட்டும் நிகழ்வில், அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலச்சந்திரன், உறுப்பினர்கள், பிரதேச மக்கள், சமூக அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி 10 இலட்சம் கையொப்பங்கள் அடங்கிய மகஜரொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்க மஹிந்த அணி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கை நேற்று கடவத்தையில் முன்னெடுக்கப்பட்டது.

க.கிசாந்தன்

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading