Local

பொதுத் தேர்தலை கட்டம் கட்டமாக நடத்த யோசனை

பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தும் யோசனை குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

எனினும் இதனை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் தீர்மானிக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா வைரஸ் பரவலை மையமாகக்கொண்டு இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வாக்குகளை எண்ணும் பணிகள் ஒருநாளில் இடம்பெறலாம், தேர்தலை உரிய காலத்துக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த யோசனை ஆராயப்பட்டு வருகிறது.

எனினும் பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவற்கான எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் இல்லை .

ஒரு நாளில் சில மாவட்டங்களுக்கும் இன்னும் ஒரு நாளில் ஏனைய மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்படலாம். இதற்கு எத்தனை நாட்களை ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்கும்.

இதற்கிடையில் நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொறுத்தவரையில் தேர்தல் திகதியை மாற்றவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் மஹிந்த தேசப்பிரிய இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading