Local

பொதுத் தேர்தலை ஜுலை 11 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் ஆராய்வு?

ஜூலை 11 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக ஆணைக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது.
இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேசுவதற்கும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார் என்றும் அறிய முடிகிறது.
ஏற்கனவே தீர்மானித்துள்ளதன்படி,ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்தக்கூடிய வாய்ப்பு இல்லாமல் இருப்பதாலும் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குக் கால அவகாசம் போதாமையாலுமே ஜூலை 11 ஆம் திகதியை பரிசீலித்து வருவதாக அறிய முடிகிறது.
இது குறித்து மஹிந்த தேசப்பிரிய 11 ஆம் திகதி திங்கள் கிழமை கட்சித் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று ஆணைக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது.
Copy

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading