Local

பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கையாள்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு மக்கள் பணத்தில் இருந்து 8 பில்லியன் ரூபா வழங்க தீர்மானம்

தேர்தல் நடவடிக்கையைக் கையாள்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு 8 பில்லியன் ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

” நோய்நொடியிலிருந்து ஜனநாயகத்தையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும்.அப்பணிகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு 8 பில்லியன் ரூபா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக மருத்து விநியோகத்தர்களுக்கு நிலுவையாக உள்ள கொடுப்பனவை வழங்குவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறினார்.

பொதுத்தேர்தலை ஒத்திவைப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவே முடிவெடுத்து அறிவிக்கும்.

அத்துடன், அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள பொதுவிடுமுறை நீடிக்கப்படுமா என்பது குறித்து ‘கொவிட்-19’ விவகாரத்தை கையாளும் செயலணியே இன்று அறிவிப்பு விடுக்கும் எனவும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading