Gossip

பொது இடங்களில் உறவு கொண்டதாக பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு தகவல்!

பொது இடங்களில் உறவு கொண்டது குறித்து காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

பிரபல பாலிவுட் இயக்குரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் லைகர் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவும், ஹீரோயின் அனன்யா பாண்டேவும் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் செக்ஸ் பற்றி கரண் ஜோஹர் கேட்க விஜய் தேவரகொண்டாவோ வெளிப்படையாக பேசிவிட்டார்.

பொது இடங்களில் உறவு கொண்டது உண்டா என்கிற கேள்விக்கு, சிறு படகு மற்றும் கார்களில் உறவு கொண்டேன் என்றார் விஜய் தேவரகொண்டா. கார் அசவுகரியமாக இல்லையா என்று கேட்டதற்கு, அவசரத் தேவைக்கு அது தான் கிடைத்தது என்றார் விஜய். பெரிய பிளாக்பஸ்டரா, இல்லை சிறந்த செக்ஸா, இதில் எதை தேர்வு செய்வீர்கள் என்று விஜய்யிடம் கேட்டதற்கு, பிளாக்பஸ்டர் என்றார்.

இதுவரை ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் உறவு கொண்டதுண்டா என்று கரண் ஜோஹர் கேட்டார். அதற்கு இல்லை என்று பதில் அளித்தார் விஜய். அப்படி செய்ய விருப்பமா என்று கரண் கேட்டதற்கு, முயற்சி செய்வதில் தவறில்லை என்று விஜய் தெரிவித்தது தான் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

அனன்யா

பொது இடத்தில் உறவு கொண்டதுண்டா என்று அனன்யாவிடம் கேட்டார் கரண். அதற்கு அவரோ, நான் உறவு கொண்டதே இல்லை என்றார். என் அப்பா, அம்மா இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அனன்யா கூறினார். அவர்கள் என்ன நினைப்பார்கள், தங்கள் வீட்டில் கன்னித்தன்மையுடன் இருக்கும் பெண் இருக்கிறார் என்றா என கரண் கலாய்த்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading