Cinema

போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு பொலிஸாரினால் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் போதைப்பொருள் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பொலிஸ் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரது இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் சில பிரபலங்களை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வலையத்தை முழுமையாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading