போரில் ஈரானின் கையே ஓங்கியுள்ளது…!!!
ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கு இடையில் கடந்த பெப்ரவரி 28 முதல் தீவிரமடைந்துள்ள போரில், ஈரான் மிகவும் சாதுர்யமாகவும் உறுதியாகவும் செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவின் Secret Intelligence Service (MI6) அமைப்பின் முன்னாள் தலைவர் அலெக்ஸ் யங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அமெரிக்கா இந்தப் போரின் சவால்களைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக போரின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியை அமெரிக்கா இழந்து, அது தற்போது ஈரானின் வசமாகியுள்ளது.
அமெரிக்கா இந்தப் போரை ஒரு தெரிவாக முன்னெடுத்தாலும், ஈரான் இதனைத் தனது நாகரிகத்தையும் இருப்பையும் தற்காத்துக் கொள்வதற்கான போராகக் கருதுகிறது. இது ஈரானியர்களுக்கு அதிக மன உறுதியை வழங்கியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், ஈரான் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை அச்சுறுத்தி, போரைத் தனக்குச் சாதகமாக மாற்றியுள்ளது.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்க – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் அதியுயர் தலைவர் அலி காமேனி மற்றும் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி ஆகியோர் கொல்லப்பட்டனர். இருப்பினும், புதிய தலைமுறைத் தலைவர்கள் ஊடாக ஈரான் விரைவாக மீண்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

You must be logged in to post a comment.