Jobs

ப்ரைம் லேண்ட்ஸ் மற்றும் மெல்வா இணைந்து கொழும்பு துறைமுக நகரில் சர்வதேச தரத்திலான மரீனா – ப்ரண்ட் ஆடம்பர வீட்டுத் திட்டத்தை தொடங்குகிறது

 

இலங்கையின் கைத்தொழில் துறையின் இரண்டு முன்னணி நிறுவனங்களான ப்ரைம் லேண்ட்ஸ் மற்றும் மெல்வா இணைந்து கொழும்பு துறைமுக நகரில் சர்வதேச தரத்திலான மரீனா – ப்ரண்ட் ஆடம்பர வீட்டுத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளன. இலங்கையின் நீண்ட கால பொருளாதார எதிர்காலம் குறித்து ஏற்பட்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இவ்விரு நிறுவனங்களும் துறைமுக நகரின் மரீனா வலயத்தில் அமைந்துள்ள 04 ஏக்கர் பரப்பளவிலான பெறுமதிமிக்க காணியை பெற்று அதனை அபிவிருத்தி செய்வதற்கு 57.6 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. இக் கருத்திட்டத்தின் நிறைவுக்கு பின்னர் 250 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் முதலாவது வெளிநாட்டுப் பணப் பயன்பாட்டு சிறப்பு பொருளாதார வலயமான துறைமுக நகரில் மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தி திட்டமானது, இலங்கையின் சொகுசு நீர்நிலை சார்ந்த நகர்ப்புற வாழ்க்கைமுறைக்கு புதிய சர்வதேச தர நிர்ணயத்தை சேர்க்குமென கைத்தொழில் துறை பெரிதும் நம்புகிறது. இந்த அபிவிருத்தித் திட்டத்தின் தனித்துவம் யாதெனில், கடல் மற்றும் ஆறு ஆகிய இரண்டினதும் நேரடி அணுகலை கொண்டதாக அமையப்பெறவுள்ளமையாகும். அக்காரணத்தினால் இதன் அனைத்து வீட்டு அலகுகளும் எவ்வித இடையூறுமின்றி கடல் மற்றும் நீர்நிலை சார்ந்த காட்சிகளை கூடுதலாக ரசிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நவீன ஆடம்பர வாழ்க்கைமுறை, அழகிய வீட்டு அலங்கார வடிவமைப்புகள் மற்றும் சர்வதேச மட்டத்திலான நகர்ப்புற வசதிகள் ஆகியவை இங்கு சங்கமிக்கின்றன. இத்திட்டம் வெறுமனே வீட்டுத் திட்டம் மாத்திரமின்றி இலங்கையை உலகளாவிய முதலீட்டு வரைபடத்தில் மேலுமொரு படிக்கு உயர்த்துவதற்கான நீண்ட கால நோக்கின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. சர்வதேச ரீதியாக மரீனா – ப்ரண்ட் ஆதனங்கள் சொகுசு ரியல் எஸ்டே்ட் சந்தையில் கூடுதலான கிராக்கியை கொண்ட சொத்துக்களின் பட்டியலுக்குள் உள்ளடங்குவதோடு இத் திட்டம் இலங்கையின் மேம்பட்ட தனித்துவமான நீர்நிலை முகவரியாக மாறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மெல்வா குழுமம் பல தசாப்த கால அனுபவத்துடன் கூடிய உறுக்கு சார்ந்த உற்பத்திகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித் துறையில் முதன்மை நாமமாக விளங்குவதோடு ப்ரைம் லேண்ட்ஸ் 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நவீன நகரப்புற சமூகமொன்றை உருவாக்கி வரும் முன்னணி ரியல் எஸ்டேட் அபிவிருத்தி நிறுவனமாக செயற்பட்டு வருகிறது. மெல்மா குழுமத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவரொருவர் இத் திட்டம் குறித்து தெரிவிக்கையில், ப்ரைம் மற்றும் மெல்வா இணைவதென்பது அனுபவம், தொலைநோக்குப் பார்வை மற்றும் கைத்தொழில் தலைமை ஒன்றிணைந்த தனித்துவமான சர்வதேச தரத்திலான அபிவிருத்திக்கு வாய்ப்பளிப்பதாகுமெனவும், இலங்கையை சர்வதேச தரத்திலான நகர்ப்புற வாழ்க்கை மற்றும் முதலீட்டு வழித்தடமாக முன்னெடுத்துச் செல்லும் நம்பிக்கையை இத்திட்டம் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார். இந்த அபிவிருத்தி திட்டமானது, கட்டுமானங்கள், பொறியியல், போக்குவரத்து, தொழில் சேவைகள் மற்றும் அவை சார்ந்த பல்வேறு கைத்தொழில்களுக்கு ஏராளமான பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு இலங்கை சர்வதேச ரீதியாக போட்டி முதலீட்டு மற்றும் ரியல் எஸ்டே்ட் அபிவிருத்தி வழித்தடமாக மேலும் வலுப்பெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading