இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிவு
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (02) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவைத் தாண்டியுள்ளது.
அதற்கமைய, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 326.75 ரூபாவாகவும், விற்பனை விலை 336.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று (01) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 325.97 ரூபாவாகவும், விற்பனை விலை 335.70 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.