Local

மகனை பலியெடுத்த தந்தை! களனியில் கொடூரம்!!

களனி – பொல்லேகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது மகனையே தந்தையொருவர் படுகொலைசெய்த கொடூரச்சம்பவமொன்று அரங்கேறியுள்ளது.


26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார் என்றும், தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் இறுதியில் கொலைவரை சென்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளியான தந்தை தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading