World

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 35 ஆண்டுகள் சிறை!

கேரள மாநிலம் தொடுபுழா பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு மே 24-ந்தேதி அவரின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் வெளியே சென்று இருந்தனர். அப்போது வீட்டில் சிறுமியும் அவரின் தந்தையும் மட்டும் இருந்தனர்.

இந்த நிலையில் சிறுமியிடம் அவரின் தந்தை பாலியல் தொல்லையில் ஈடுபட்டார்.மேலும் இது குறித்து யாருக்கும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்.

இந்த நிலையில் வெளியே சென்ற தாய் வீடு திரும்பினார்.அவரிடம் தந்தையின் பாலியல் தொல்லை குறித்து சிறுமி கூறினார். இது குறித்து சிறுமியின் தாய் குழந்தைகள் நல அதிகாரியிடம் புகார் கொடுத்தார். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமியின் தந்தை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடுபுழா போஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.அதில், சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிறுமியின் தந்தைக்கு 35 ஆண்டு கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading