Local

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்தும் கெடுபிடிகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களினால் எழுதப்பட்ட கடிதம் இன்று (02) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தவே கூடாது என மகாசங்கத்தினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading