மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

வார இறுதி நாட்களில் நாடு முழுவதும் சிறப்பு தொலைபேசி மூலமான கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
இதன்படி ,நாளை மற்றும் நாளை மறுதினம் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்களைக் கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், கொழும்பு நகரத்திலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் சிறப்பு ட்ரோன் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளன.
