Local

மக்கள் பணத்தை துஷ்பிரயோகம் செய்த கோட்டா தண்டிக்கப்பட வேண்டும்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடு திரும்புவதற்கான உரிமை உள்ளது, ஆனால் மக்கள் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி இன்று தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கு நாடு திரும்ப உரிமை உண்டு என கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டின் குடிமகன், அவருக்கு தனது தாய்நாட்டிற்கு திரும்ப உரிமை உண்டு. இந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. எவ்வாறாயினும், நிதி துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்காக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது பெற்றோரின் நினைவுச் சின்னத்திற்காக அரச நிதியை செலவிட்டதாக அவர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்குகளை மீண்டும் தொடர வேண்டும் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவருக்கு சட்டப்பூர்வ விதிவிலக்கு இல்லாததால், அவர் விசாரணைகளை எதிர்கொள்ளவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தண்டனை வழங்கவும் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading