Features

மக்கள் மறந்து போன “பாதாள சங்கிலி”

25 வருடங்களுக்கு முன் அனைவருக்கும் நீர் ஆதாரமே கிணறுதான்!

போர்வெல் அதிகமாக வருவதற்கு முன் எல்லோர் கிணற்றிலும் பத்து அடி ஆழத்திலே தண்ணீர் கிடக்கும்.கிணறு இல்லாத வீடுகளே இல்லை எனலாம்.

போர்வெல் வருகைக்கு பிறகு கிணறுகள் மெல்ல மெல்ல அரிதாகி போனது.

தினம் யாராது ஒருவர்,ஏதாவது ஒரு கிணற்றில் தண்ணி தூக்கும் போது வாளியை,குடத்தையை உள்ளே போட்டு விடுவார்கள்.

தண்ணீரில் ஊறிப்போய் இருக்கும் கயிறு குடத்தின் பாரம் தாங்காமல் அறுந்துவிடும்.

கிணற்றுக்குள் விழுந்த வெண்கல,எவர் சில்வர் குடத்தையோ,வாளியை எடுப்பதற்கு உதவும் கருவியின் பெயர் “பாதாள சங்கிலி”

இது அப்ப எல்லோர் வீடுகளிலும் இருக்காது.யாராவது ஒரு வீட்டில்தான் இருக்கும் அதனால் கிராக்கி அதிகம்.

விழுந்த குடத்தை எடுக்க கயிறு மூலம் இதை உள்ளே விட்டால் எப்பவோ உள்ள விழுந்த குடமும் சேர்த்து வரும்.

காலம் தின்று தீர்த்த விசயங்களில் இதுவும் ஒன்று….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading