Features

மஞ்சள் அதிகமாக பயன்படுத்தும் போது உண்டாகும் பக்கவிளைவுகள்!

●கைவைத்தியம் முதல் அல்சைமர் வரை பல நோய்களுக்கு மஞ்சள் நன்மை தரக்கூடியது என்றாலும் அமிர்தமே ஆனாலும் அளவாக பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் அவை நஞ்சாக மாறிவிடும் என்பதற்கேற்ப மஞ்சளை அதிகமாக பயன்படுத்தும் போது பக்கவிளைவுகளும் உண்டாக செய்யும்.

●அதிகப்படியான மஞ்சள் வயிற்றின் செரிமானத்தை பாதிக்க செய்யும். புற்றுநோய் தாக்கம் இருப்பவர்கள் மஞ்சளை எடுத்துகொள்ளும் போது சிலர் இதை தவிர்ப்பதாக கூறினார்கள்.

●ஏனெனில் அவர்களது செரிமானம் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்ததுதான். மஞ்சள் இரப்பையில் அமில சுரப்பை அதிகரிக்க செய்கிறது. வயிற்றூ பிடிப்பு, பிடிப்புகளுக்கு வழிவகுக்க செய்கிறது இதற்கான காரணம் சரியாக கண்டறியப்படவில்லை.

●ஆனால் மஞ்சள் ரத்தத்தை மெலிதாக்க செய்கிறது. மஞ்சள் உடல் சுத்திகரிப்பின் போது ரத்தம் மெலிதல் உண்டாகிறது.

●கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறைப்பில் மஞ்சள் பயன்படுகிறது என்றாலும் ரத்தத்தில் மஞ்சள் செயல்படும் விதத்தில் இத்தகைய நிலைகள் உண்டாகலாம். குறிப்பாக ரத்த மெலிப்பு மருந்துகள் எடுத்துகொள்பவர்கள் மஞ்சளை அதிகம் எடுக்கும் போது இந்நிகழ்வு அதிகமாக பாதிக்கப்படுகிறது.

●மஞ்சள் அதிகமாக எடுக்கும் போது அது சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது.

●மஞ்சளில் இருக்கும் ஆக்சலேட்டுகள் கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட் உருவாக்குகிறது.
இது கரையாத தன்மையை கொண்டிருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாவதும் தவிர்க்க முடியாததாகிறது.
அதோடு ஏற்கனவே சிறுநீரக கற்கள் அபாயத்தை கொண்டிருப்பவர்களுக்கு இது அதிகப்படியான விளைவை உண்டாக்கலாம்.

●மஞ்சளில் 2% ஆக்சலேட் உள்ளதால் அதிகமாக பயன்படுத்த கூடாது.
மஞ்சள் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுத்து இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கலாம்.

● மஞ்சள் தேவையான அளவு எடுத்துகொள்ளும் போது இத்தகைய பிரச்சனை உண்டாவதில்லை, அதே நேரம் ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாடு பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் மஞ்சள் அதிகமாக சேர்க்கும் போது அது சத்து குறைபாட்டை அதிகரிக்க செய்துவிடவும் வாய்ப்புண்டு.

முடிந்த அளவு குறைவான அளவு சுத்தமான மஞ்சளை பயன்படுத்துவோம்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading