மணமகன் நடனமாட அழைத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

உத்தர பிரதேசத்தில் குடித்துவிட்டு மணமக்களை மணமகன் நடனமாட அழைத்ததால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு ஹசீனா எனும் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு காரணத்தால் திருமணம் மிக சாதாரணமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது நடைபெற்ற மெழுகுவர்த்தி ஒளிரச்செய்யும் நிகழ்வின் பொழுது மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் அதிக அளவு குடிபோதையில் இருந்துள்ளனர்.
திருமண நாளன்று மணமகன் அதிக குடிபோதையில் தடுமாறியதை கண்டு மணமகள் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மணமகன் மணமகளை தன்னுடன் நடனமாட அழைத்தது மட்டுமல்லாமல் உறவினர்கள் சிலர் மணமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மணமகள் தன்னுடைய திருமணத்தை நிறுத்துமாறு குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். உடனடியாக மணமகளின் சொல்லை கேட்டு திருமணத்தை நிறுத்திய குடும்பத்தினர், மணமகன் குடும்பத்திற்கு மணமகள் குடும்பத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் பரிசுகள் அனைத்தும் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
உடனடியாக மணமகன் குடும்பத்தினர் மணமகள் குடும்பத்தினரை சமாதானம் செய்ய முயற்சித்த போதும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை
