Local

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் என்ன? மைத்திரி – ரணில் இவ்வாரம் பேச்சு!

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பாக, இலங்கை அரசு இந்த வாரம் முடிவு ஒன்றை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்தல விமான நிலைய விவகாரம் தொடர்பாக, இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறும் என்று  போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து முகாமைத்துவம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம்  முடிவு செய்திருந்தது.

இதுதொடர்பாக முன்வைக்கப்பட்ட திட்டம் குறித்து தாம் பரிசீலனை செய்து வருவதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இணைந்து,  ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டம் முன்வைக்கப்பட்ட போதும், பின்னர் அது தொடர்பான பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை  துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டதையடுத்து  டில்லி தரப்பிலிருந்து கடுமையான  இராஜதந்திர  அழுத்தங்கள்  பிரயோகிக்கப்பட்டன.

இதையடுத்தே மத்தல விமானநிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு  வழங்குவதற்கு  முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்தும் இழுபறியிலேயே இருந்துவருகின்றது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading