World

மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்!

ரஷ்யாவிற்கு சொந்தமான ‘ஆர்க்டிக் மெட்டாகாஸ்’ (Arctic Metagaz) எனும் பாரிய எரிவாயு போக்குவரத்து கப்பல் மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலின் தீவிரத்தன்மை காரணமாக பாரிய சுற்றுச்சூழல் அழிவு ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உடனடி அச்சுறுத்தல்

பிரான்ஸ் மற்றும் இத்தாலி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இதை ‘உடனடி அச்சுறுத்தல்’ என்று விவரித்துள்ளதுடன், இதன் ‘பேரழிவு’ சுற்றுச்சூழல் தாக்கங்களையும் சுட்டிக்காட்டியுள்ளன.

மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை | Warning Issued Malta Italy Amid Imminent Threat

இக்கப்பல் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடல்சார் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், அதன் ஒரு பக்கத்தில் பெரிய துளை ஏற்பட்டு பலத்த சேதமடைந்துள்ளது.

900 அடி நீளமுள்ள ‘ஆர்க்டிக் மெட்டாகாஸ்’ கப்பல், தென்மேற்கே ஆட்கள் இன்றி மிதந்து கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலி  துறைமுகங்களில் நங்கூரமிட மறுப்பு

இந்தத் தாக்குதலை உக்ரைன் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், குறித்த கப்பலில் மாலுமிகள் எவரும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி இந்த கப்பலை “எரிவாயு நிரப்பப்பட்ட, வெடிக்க காத்திருக்கும் நேர வெடிகுண்டு” என்று விவரித்து, தங்கள் துறைமுகங்களில் நங்கூரமிட விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading