Local

மத்திய கிழக்கில் பணிபுரியும் 10ஆயிரம் இலங்கையர்கள் தொழில் இழப்பு!

மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளிலுள்ள இலங்கையர்கள் சுமார் 10,000 பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர், ஊடகப் பேச்சாளர் மங்கல ரன்தெணிய தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட முடக்க நிலையை அடுத்து, பல்வேறு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தங்களது தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதியான நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக, அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருவதற்காக சுமார் 40,000 இலங்கைத் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, தேவையான வசதிகளை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முடிவு செய்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading