மத்திய கிழக்கில் பதற்றம்! அதிரும் சர்வதேச போக்குவரத்து!!
மத்திய கிழக்கில் பதற்றம் – 2,600-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து! அதிரும் சர்வதேச போக்குவரத்து
மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் தாக்குதலால் இதுவரை சுமார் 2,600 விமானச் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
FlightAware நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
உலக அளவில் கிட்டத்தட்ட 19,000 விமானச் சேவைகள் தாமதமடைந்தன எனவும் கூறப்படுகின்றது.
ஈரான், ஈராக், இஸ்ரேல், குவைத் ஆகிய நாடுகள் தங்கள் ஆகாயவெளியை முழுமையாக மூடியுள்ளன. கத்தார், சிரியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியன தங்கள் ஆகாயவெளியின் ஒரு பகுதியை மூடிவிட்டன.
Air France, Air India, Turkish Airlines, Norwegian, Qatar Airways, American Airlines முதலிய நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் சேவைகள் பலவற்றை ரத்துச் செய்வதாக அறிவித்துள்ளன.
நேற்று மத்திய கிழக்குக்குச் செல்லவிருந்த சுமார் 22 விழுக்காட்டு விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதாக Cirium விமானத்துறை ஆய்வு நிறுவனம் கூறியது.
கிட்டத்தட்ட 4,200 விமானச் சேவைகளில் சுமார் 960 சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதை அது சுட்டியது.
மத்திய கிழக்கிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்லவிருந்த சுமார் 830 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
இன்று மத்திய கிழக்குக்குச் செல்லவிருக்கும் சுமார் 4,300 சேவைகளில் 700க்கும் மேற்பட்டவை ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும் Cirium தெரிவித்தது.

You must be logged in to post a comment.