World

ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கையால் பேராபத்துக்குள் உலக எண்ணெய் சந்தை

ஹோர்முஸ் நீரிணை வழியாக எவராவது நுழைய முயன்றால் அவர்கள் மீது “தீவைக்கப்படும்” என ஈரான் உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின்  தலைமை தளபதியின் ஆலோசகர் , அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் உரையாற்றும் போதே இந்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தீயிட்டு கொளுத்துவோம் ; ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கையால் பேராபத்துக்குள் உலக எண்ணெய் சந்தை | Iran Issues Warning Of Hormuz

உலகளாவிய எண்ணெய் விநியோகம்

ஹோர்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய அவர், விடுத்துள்ள எச்சரிக்கையில்

“எந்தவொரு கப்பலும் இந்த பகுதிக்கு வரக்கூடாது மீறி வந்தால் அவர்கள் எங்களது கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும்,” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கர்கள் இந்த பிராந்தியத்தின் எண்ணெய் மீது தாகம் கொண்டுள்ளார்கள் எனக் குற்றம் சாட்டிய ஜப்பாரி, இந்தப் பிராந்தியத்தில் உள்ள அவர்களின் குழாய் இணைப்புகளைத் தாக்குவோம் என்றும், இங்கிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading