50 அதிர்ஷ்டசாலிகளுக்கு மவுண்டன் சைக்கிள்கள் வழங்கி Scan Jumbo Bonanza 9ஆவது பதிப்பில் கொண்டாட்டம்
நாடு முழுவதுமுள்ள நுகர்வோருக்கு மீண்டுமொருமுறை உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு சேர்க்கும் வகையில், ‘Scan Jumbo Peanut’ நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9ஆவது பதிப்பான “Scan Jumbo Bonanza” வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், அதன் 50 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் பிரமாண்டமான விழா ஜூன் 10ஆம் திகதி Grand Oriental ஹோட்டலில் நடைபெற்றது. C.W. Mackie PLC நிறுவனத்தின் ‘Scan Products’ பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த வெற்றியாளர்களுடன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் விசேட அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வானது, தனது மதிப்புமிக்க நுகர்வோரின் விசுவாசத்தை அங்கீகரித்து பாராட்டுவதற்கும், வர்த்தகநாமத்திற்கும் நுகர்வோருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்குவதற்கும் இவ்வர்த்தகநாமம் மேற்கொண்டு வரும் நீண்டகால முயற்சியின் மற்றுமொரு வெற்றிகரமான மைல்கல்லாக அமைந்தது.
2025 ஜூன் – நவம்பர் வரையிலான 5 மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஊக்குவிப்புத் திட்டம், விரிவான களமட்டத்திலான செயற்பாட்டு பிரசாரத்தின் மூலம் நாடு முழுவதுமுள்ள 180 இற்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள நுகர்வோரை வெற்றிகரமாகச் சென்றடைந்தது. நுகர்வோர் தங்களது தனிப்பட்ட விபரங்களுடன், வெற்று Scan Jumbo Peanut உறை ஒன்றினை தபால் பெட்டி இல. 161, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் இதில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது; அதேவேளையில், நாடு முழுவதும் பயணித்த உற்சாகமான Scan Jumbo Bonanza பிரசார வாகனங்கள் மூலமும் பலர் இந்த பிரசாரத்தில் இணைந்து கொண்டனர், இது பொதுமக்களிடையே பலத்த ஈர்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இப்பிரச்சாரத்தின் பரவலான அணுகல், பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த நுகர்வோருடன் தொடர்பை ஏற்படுத்த இவ்வர்த்தகநாமத்திற்கு உதவியதுடன், உற்சாகமான பங்கேற்பை தூண்டி, இலங்கை வீடுகளில் Scan Jumbo Peanut இனது பிரபலத்தை மேலும் உறுதிப்படுத்தியது.
Scan Jumbo Bonanza என்பது, பல வருடங்களாக இந்த வர்த்தகநாமத்தை தொடர்ச்சியாக தெரிவு செய்து வரும் விசுவாசமான வாடிக்கையாளர்களை பாராட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது குறித்து C.W. Mackie PLC Group of Companies நிறுவனத்தின் Scan Products பிரிவின் உதவி பொது முகாமையாளர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) அருண சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது வர்த்தகநாமம் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான விசுவாசத்திற்காக அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவிப்பதே இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் நோக்கமாகும். இந்த ஆண்டின் Jumbo Bonanza திட்டம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதுடன், C.W. Mackie நிறுவனம் எதிர்காலத்திலும் தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு தரமான திட்டங்களைத் தொடர்ச்சியாக வழங்க ஆவலுடன் எதிர்பார்க்கிறது.” என்றார். இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் தொடர்ச்சியான வெற்றியானது, Scan வர்த்தகநாமம் மீது நுகர்வோர் வைத்துள்ள வலுவான நம்பிக்கையை பிரதிபலிப்பதுடன், தனது வாடிக்கையாளர்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை பேணுவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.
இப்பிரிவில் 70% இற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளதன் மூலம் சந்தையில் முன்னணி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள Scan Jumbo Peanut ஆனது, அதன் தரம், புத்துணர்ச்சி, சிறந்த சுவை ஆகியவற்றிற்கான நற்பெயரை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலக்கடலைகள், இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார நிலைமைகளின் கீழ் பதப்படுத்தப்பட்டு, Scan வர்த்தகநாமம் கொண்டுள்ள நம்பகமான தரத்தை நுகர்வோர் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பொதி செய்யப்படுகின்றன. இதன் வலுவான சந்தை இருப்பு மற்றும் நுகர்வோர் விருப்பம் ஆகியன, இந்த வர்த்தகநாமம் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் சிற்றுண்டி தயாரிப்புகளில் ஒன்றாக தொடர்வதற்கு உதவியுள்ளன. தரம் மற்றும் சீரான தன்மை தொடர்பில் இவ்வர்த்தகநாமம் கொண்டுள்ள தளராத அர்ப்பணிப்பானது, சந்தையில் அதன் தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்ள உதவியுள்ள அதேவேளையில், தலைமுறைகள் கடந்த நுகர்வோரின் நம்பிக்கையையும் தொடர்ந்து பெறச் செய்துள்ளது.
120 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட C.W. Mackie PLC நிறுவனமானது கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது தனது பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, பல்வேறு வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்த பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் குழுமத்தின், வேகமாக நுகரப்படும் நுகர்வோருக்கான உற்பத்திகள் (FMCG) பிரிவான Scan Products பிரிவு, பாரம்பரிய வர்த்தகம், நவீன வர்த்தகம், HORECA (Hotel, Restaurant, Catering) வழிகள் மற்றும் நிறுவனங்கள் மூலமான விநியோகம் ஆகியவற்றின் மூலம், சந்தைகளுக்குள் பல்வேறு நுகர்வோர் ஊடுருவுவதற்கான ஒரு கலப்பு நேரிடை சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் Sunquick, Scan Jumbo Peanuts, Scan Snacks, Kotagala Kahata, Muthu Kahata, Delish Jelly, Scan குடிநீர் போத்தல், KVC தயாரிப்புகள் (பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள்), N-Joy தேங்காய் எண்ணெய் மற்றும் Star Brand Essences மற்றும் Colorings போன்ற நன்கு அறியப்பட்ட வர்த்தகநாமங்கள் அடங்கியுள்ளன, இவை அனைத்தும் அந்தந்த பிரிவுகளில் சந்தையின் முன்னணி தயாரிப்புகளாக உருவெடுத்து, இலங்கை நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. நம்பகமான வர்த்தகநாமங்களின் வலுவான தளத்தின் மூலமும் விரிவான விநியோக வலையமைப்பின் மூலமும், நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு தரமான தயாரிப்புகளை வழங்குவதில் இந்நிறுவனம் தொடர்ச்சியாக முக்கிய பங்கு வகித்து வருகிறது.

You must be logged in to post a comment.