மனிதன் அன்றாடம் உண்ணும் உணவில் மாபெரும் சதி..!!
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் என்ற பெயரில் நமக்கு விற்கப்படும் பல விஷயங்கள், உண்மையில் நம்மை நோயாளிகளாகவே வைத்திருப்பதற்கான உலகளாவிய சந்தை உத்தியாக மாறிவிட்டன.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு மருத்துவரின் முகநூல் பதிவைப் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியும் வேதனையும் இன்னும் தீரவில்லை.
அமெரிக்காவில் படித்த Dr.xxxxx என்பவரின் முகநூல் கருத்துக்கள் என் கண்களில் பட்டன.
அதில் அவர் Sunflower Oil (சூரியகாந்தி எண்ணெய்) மற்றும் Corn oil ஆகியவை வெண்ணெயை விட இதயத்திற்கு நல்லது என்றும், Canola எண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது என்றும் அதில் Omega-3 நிறைந்துள்ளது என்றும் மிகச் சாதாரணமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் படித்ததும் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது!
நம் பாரம்பரிய உணவுகளைத் தள்ளிவைத்துவிட்டு, தொழிற்சாலைகளில் தயாராகும் ரசாயனக் கழிவுகளை “ஆரோக்கியம்” என்று இந்த மருத்துவர்கள் பரிந்துரைப்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.
உண்மையில், மருத்துவர் XXXXX போன்றவர்களை நாம் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில், அவர்கள் படிக்கும் மருத்துவக் பாடத்திட்டங்கள் (Syllabus) அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவர் XXXXX போன்றவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மருத்துவப் பாடத்திட்டத்தில் (Syllabus) போதிக்கப்பட்டதை அப்படியே பேசுகிறார்கள்.
ஆனால், அந்தப் பாடத்திட்டத்தை எழுதிய pharmaceuticals கார்ப்பரேட்டின் கைகளின் பின்னணியில் உள்ள வணிக அரசியலையும், இந்த Seed Oilகளின் பேராபத்தையும் நாம் உரக்கச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஏற்கனேவே Rockerfellar சதியும் The Flexner Report-1910 ம் என்ற கட்டுரையில் மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.
நவீன மருத்துவக் கல்வி முறை, குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘Rockefeller Foundation போன்ற பெரும் முதலாளிகளால் வடிவமைக்கப்பட்டது.
நோய்க்கான மூலக் காரணத்தைக் (Root cause) கண்டறிந்து குணப்படுத்துவதை விட, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளை உருவாக்குவதே இந்த அமைப்பின் மறைமுக நோக்கம்.
“நோயை முற்றிலுமாகக் குணமாக்குவதை விட, அதைத் தொடர்ந்து ‘சிகிச்சை’ (Treatment) அளிப்பதன் மூலமே ஒரு மனிதனை வாழ்நாள் முழுவதும் வாடிக்கையாளராக வைத்திருக்க முடியும்.”
இந்த ஒற்றை வணிக நோக்கம் தான் இன்றைய பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மருந்து நிறுவனங்களின் (Pharmaceutical Industry) அஸ்திவாரமாக மாறியது.
நோயின் மூலத்தை (Root cause) வேரோடு அழிப்பதற்குப் பதிலாக, நோயின் அறிகுறிகளுக்கு (Symptoms) தற்காலிக மருந்து கொடுத்து, மனிதர்களை ஆயுள் முழுக்க மருந்துகளுக்கு அடிமையாக்குவதே இதன் மையப்புள்ளி ஆகும்.
இன்று 5 முதல் 6 வருடங்கள் கடினமாகப் படிக்கும் மாணவர்களுக்கு, மனித உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியைப் பற்றியோ அல்லது உணவின் மூலமே நோயைக் குணமாக்கும் தத்துவத்தையோ விரிவாகக் கற்றுத் தரப்படுவதில்லை.
மாறாக, எந்த அறிகுறிக்கு எந்தக் கெமிக்கல் மருந்தை எழுதிக் கொடுக்க வேண்டும் (Prescribe) என்பது மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், வெறும் ‘Treatment’ செய்ய மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகிறதே தவிர, நோயின் மூலக்காரணத்தைக் குணப்படுத்த (Cure the root causes) சொல்லித் தரப்படுவதில்லை.
மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம், பார்மா (Pharmaceutical) நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான பாடத்திட்டங்களை உருவாக்கின.
இதனால்தான் இயற்கையான தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் போன்ற பாரம்பரிய கொழுப்புகள் “ஆபத்தானவை” என்றும், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் விதைத் எண்ணெய்கள் “இதயத்திற்கு நல்லது” என்றும் மருத்துவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது.
இதனால் தான் தற்கால மருத்துவர்கள் pharmaceutical நிறுவனங்களின் மறைமுக விற்பனைப் பிரதிநிதிகளாக ( sales representatives) மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த கார்ப்பரேட் பாடத்திட்டத்தின் படி உருவான மருத்துவர்கள் தான், Canola (Canola) போன்ற நச்சு எண்ணெய்களை ஆரோக்கியம் என்று recommends செய்கிறார்கள்.
உண்மையில் Canola என்பது இயற்கையாக விளையும் தாவரமே கிடையாது.
இது Rapeseed என்ற கடுகு வகை தாவரத்தை மரபணு மாற்றம் (GMO) செய்து உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை வடிவம்.
இதன் தயாரிப்பு முறையைக் கேட்டாலே உங்களுக்கு அருவருப்பு ஏற்படும்:
இயற்கையான எண்ணெய்கள் செக்கில் ஆட்டி எடுக்கப்படும்.
ஆனால் Canola Oil, Sunflower oil, Corn oilகள் பின்வரும் கொடூரமான chemicals processing மூலம் தயாரிக்கப்படுகின்றன:
முதலில் விதைகள் மிக அதிக ( high Heat)வெப்பநிலையில் வறுத்தெடுக்கப்படுகின்றன. இதனால் அதில் உள்ள நல்ல சத்துக்கள் முற்றிலும் அழிகின்றன.
அடுத்து விதைகளில் இருந்து கடைசி சொட்டு எண்ணெயையும் பிழிந்தெடுக்க ‘Hexane” ‘ என்ற பெட்ரோலிய chemical பயன்படுத்தப்படுகிறது.
அதன்பின்னர் கசப்பான வாசனை மற்றும் அடர் நிறத்தை நீக்க பலத்த ரசாயனக் கழுவல் ( Oxidation and bleaching) செய்யப்படுகிறது.
அடுத்ததாக இந்த ரசாயனச் செயல்பாடுகளால் ஏற்படும் அழுகிய நாற்றத்தைப் போக்க, மீண்டும் அதிக வெப்பநிலையில் (Deodorize) வாசனை நீக்கம் செய்யப்படுகிறது.
கடைசியாக கூடிய shelf lifeற்காக மீண்டும் chemicals சேர்க்ப்படுகின்றன.
இந்தச் செயல்பாட்டின் போது, எண்ணெயில் உள்ள கொழுப்புகள் Trans-fats ஆக மாறி, நச்சாக உருவெடுக்கின்றன.
மொத்தமாக இந்த வகை எண்ணைகள் “food Value” என்ற ஸ்தானத்தை முற்றாக இழக்கின்றன.
Dr .XXXXX கூறியது போல Canola மற்றும் Sunflower Oilகளில் Omega-3 இருப்பதாக மருத்துவர்கள் கூறுவது ஒரு பகுதி உண்மை மட்டுமே.
ஆனால், இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், சுத்திகரிப்புச் செயல்பாட்டின் போது அந்த Omega-3 முற்றிலும் சிதைந்து, உடலுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் Omega-6 / Linoleic Acid அளவற்றதாக மாறுகிறது.
உடலில் Omega-6 மற்றும் Omega-3 விகிதம் 1:1 என்ற அளவில் இருக்க வேண்டும்.
ஆனால் Seed oilகளை பயன்படுத்தும்போது இது 20:1 என்ற ஆபத்தான நிலையை எட்டுகிறது.
இது உடலில் Chronicl Inflammation ஐ ஏற்படுத்தி, புற்றுநோய், நீரிழிவு , Obesity மற்றும் மூட்டு வலிகளுக்குக் வழிவகுக்கிறது.
இந்த எண்ணெய்கள் மிக எளிதில் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் Oxidize ஆகி நச்சுப் பொருட்களாக மாறுகின்றன. இவை நம் உடலின் உயிரணுக்களை (Cells) உள்ளிருந்து அழிக்கின்றன. அதை Oxidative stress என்பார்கள்.
1900-களுக்கு முன்பு வரை மனிதர்களுக்கு Heart Attack என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால், 1911-இல் ‘Crisco’ என்ற Hydrogenated Cottonseed Oil சந்தைக்கு வந்தது.
Butterக்கு மாற்றாக மலிவான விலையில் இது விளம்பரப்படுத்தப்பட்டது.
Crisco மற்றும் பிற தாவர எண்ணெய்களின் பயன்பாடு எப்போது அதிகரித்ததோ, அப்போதிருந்து உலகளவில் Cardiovascular Diseases மரணங்கள் Rocket போல உச்சத்தைத் தொட்டன.
புள்ளிவிவரங்களின்படி, இதய நோய்களின் பெருக்கத்திற்கும் இந்த விதைத் எண்ணெய்களின் அறிமுகத்திற்கும் நேரடித் தொடர்பு உண்டு.
Seed Oil கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சந்தையைத் தக்கவைக்க, பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி வரும் பாரம்பரிய உணவுகளான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், மற்றும் நெய் ஆகியவற்றை ( Demonized) திட்டமிட்டு முடக்கின.
Saturated Fat இதயத்திற்கு நல்லது அல்ல என்றும், அது Cholesterol ஐ அதிகரிக்கும் என்றும் போலியான ஆய்வுகளை கார்ப்பரேட் முதலைகள் மருத்துவ ஆய்வு எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்கி உருவாக்கினர்.
ஆனால் உண்மை என்னவெனில் தேங்காய் எண்ணெயிலும் நெய்யிலும் உள்ள நடுத்தர MCTs ( medium chain triglycerides) உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகின்றன மற்றும் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
நம் முன்னோர்கள் நெய்யையும் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தி ஆரோக்கியமாக 100 ஆண்டுகள் வாழ்ந்ததே இதற்குச் சான்று.
பல்கலைக்கழகப் பாடப்புத்தகங்கள் எழுதப்படுவது அறிவியல் உண்மைகளால் மட்டுமல்ல, சில நேரங்களில் கார்ப்பரேட் லாபங்களாலும் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
DR.XXXX போன்ற நவீன மருத்துவர்கள், மருத்துவ வழிகாட்டுதல்கள் (Guidelines) மற்றும் பெரிய நிறுவனங்களின் ஆய்வறிக்கைகளை (Cohort Studies) மட்டுமே நம்பிப் பேசுகிறார்கள்.
ஆனால், அந்த ஆய்வுகளுக்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் சதிகளை அவர்கள் கவனிப்பதில்லை.
நமது ஆரோக்கியம் கார்ப்பரேட்டுகளின் லாப நோக்கத்திற்கான சந்தை அல்ல.
எனவே, ரசாயனக் கழிவுகளான Canola, Sunflower , Corn எண்ணெய்களை முற்றிலும் புறக்கணிப்போம்!
நம் பாரம்பரிய செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் தூய பசு நெய்யிற்கு மாறி, நமது உடலையும் அடுத்த தலைமுறையையும் காப்பாற்ற வேண்டும்.

You must be logged in to post a comment.