Local

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்குச் செல்ல காத்திருப்போருக்கு விஷேட செய்தி!

சைனோபாம் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட தொழிலாளர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பும் போது ஏற்படும் தடுப்பூசி வகைகள் தொடர்பான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் அவர்களை தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சில மத்திய கிழக்கு நாடுகள், அந்த நாடுகளுக்குள் பயணிப்போர் சைனோபாம் அல்லாமல் வேறு தடுப்பூசி வகைகளை பயன்படுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த மத்தியகிழக்கு நாடுகளுடன், அது தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு மீண்டும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ள 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகளின் ஒரு பகுதியினை வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்காக செல்லும் பணியாளர்களுக்கு செலுத்துவதற்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading