Gossip

மனைவியின் தகாத உறவால் பலியான கணவன் இராணுவ அதிகாரி கைது!

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் கிராமசேவகரின் கணவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், லெப்டினன்ட் கேணல் தர இராணுவ அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி நேற்று பிற்பகல் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி ஆறாவது கெமுனு வோட்ச் பட்டாலியன் கட்டளை அதிகாரியொருவரே இவ்வாறு கைதானார்.

எல்ல விளையாட்டு வீரரான அகில சம்பத் ரத்னசிறி (36) என்பவரே கடத்திக் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். அத்துடன் உயிரிழந்தவரின் மனைவியான கிராமசேவகருக்கும், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தருக்குமிடையில் ஏற்பட்ட கள்ளக்காதலால் இந்த கொலை சம்பவம் நடந்தது.

அகில சம்பத் ரத்னசிறி மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரராக சித்தரிக்கப்பட்டதையடுத்து, அவரை கடத்திக் கொலை செய்ய இராணுவ அதிகாரி உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்டவரின் மனைவியான சுமித்புரவின் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மட்டக்குளிய இராணுவ முகாமில் பணியாற்றும் 13 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

படுகொலைக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் லெப்டினன்ட் கேணல், இரண்டு வாரங்களின் முன்பு இராணுவ பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று மாலை சந்தேகநபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading