World

மனைவியை தவிக்க விட்டு மச்சாளுடன் உல்லாசமாக இருந்த இளைஞன் கைது

தமிழகத்தின் கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள செம்மணக் கோன்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் அன்பரசன் (வயது 23).

இவருக்கும் திண்டுக்கல் சென்னமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தியின் மகளுக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

கரூரில் வட்டி கடையில் வேலை பார்த்த அன்பரசன் அந்த வேலையை விட்டு விட்டு மாமனார் வீட்டுக்கே வந்து விட்டார். அங்கு சாரதி வேலை பார்த்து வந்தார்.

அவரது மனைவியின் தங்கை திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது அன்பரசனுக்கு மனைவியின் மீது இருந்த மோகம் அவரது தங்கையின் மீது திரும்பியது.

இதனால் அவரிடம் ஆசை வார்த்தை பேசி பழகி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்தார்.

தனது கணவரும் தங்கையும் மாயமானதைக் கண்டு அன்பரசனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

மதுரை மாவட்டம் கப்பலூரில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிய வரவே அங்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்து வந்தனர். அன்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading