Local

மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று(17) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போதும் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கூறினார்.

அதேநேரம் மன்னாரில் காற்றைக் கொண்டு மின்னுற்பத்தி செய்யக்கூடிய வசதி அதிகம் காணப்படுகிறது.

ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பு குறித்து கருத்தில் கொள்ளாமல் அவ்வாறான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அவை அனைத்தும் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்காலத்தில் மக்களின் கருத்துகளை அறிந்து, சூழல் பாதிப்பு இல்லாமல் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் மேலதிகமாக 4 இலட்சம் பேருக்கு அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading