LocalNorth

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 143 எலும்புக்கூடுகள் மீட்பு! – பணிகளும் இடைநிறுத்தம்

மன்னாரில் சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவந்த அகழ்வுப் பணிகள் ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது எனக் களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

விரிவுரைகள் உட்பட மேலும் சில காரணங்களைக் கருத்தில்கொண்டே அகழ்வுப் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது என்றும், ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மீண்டும் பணி ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கடந்த மே மாதம் ஆரம்பமாகிய இந்த மனிதப் புதைகுழி அகழ்வில், இதுவரை 143 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகள், மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, விசேட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் தலைமையில் நடைபெறுகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading