மயோனைஸ் விற்பனைக்கு தடை!!
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு, அதை உட்கொள்வோருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே உடனடியாக முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையை மீறிச் செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயோனைஸ் சார்ந்த பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் எச்சரிக்கையுடன் செயல்படவும், பொருட்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

You must be logged in to post a comment.