Lead NewsLocalUp Country

எழுச்சிகொண்டது மலையகம்! – சம்பள உயர்வு கோரி மஸ்கெலியாவில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தோட்டத் தொழிலாளர்களை வழமைபோல் ஏமாற்றாமல் இம்முறை நியாயமான சம்பளத்தினை தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும். அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படாவிட்டால் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும்” என்று போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

சுமார் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில், கம்பனிகளின் செயற்பாடுகளுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ள போதிலும் இன்னும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில்தான் நியாயம் கோரியும், தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மலையகமெங்கும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading