Local

மஹிந்த ராஜபக்சவின் மலசலகூடத்திற்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபா?

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் பாரிய பங்கை கொண்டிருக்கின்றது என  பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனர் ஸ்ரீ லங்கன் எயார் லைன்சில் பணிப்பாளர் இருந்த போது 50 இலட்சம் வேதனம் வழங்கப்பட்டது.

இதற்கு பின்னர் வந்த ஒருவருக்கு 100 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இளைப்பாரிய இராணுவ அதிகாரி ஒருவர் செயற்பாட்டு பணிப்பாளர் நியமிக்கப்பட்டு அவருக்கு 30 இலட்சம் ரூபா கொடுப்பனவாக செலுத்தப்பட்டது.

நாமல் ராஜபக்சவின் காரியாலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் ஸ்ரீ லங்கன் எயார் லைன்சில் பணிப்பெண்ணாகவும், பணியாற்றி வருமானங்களை திரட்டி வந்தார்.

அதேநேரம், கடந்த 2010 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்சில் மலசலகூடம் ஒன்றை நிர்மாணிக்க 600 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. 

எனினும் அது நல்லாட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. 600 கோடி ரூபா செலவில் ஒரு மலசலகூடம் நிர்மாணிக்கப்படுமாக இருந்தால் அதில் தங்கத்தினாலான உதிரிப்பாகங்களே பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

நாட்டில் தொடர்ந்தும் போராட்டகள் மேற்கொள்ளப்பட வேண்டும். போராட்டங்களுக்கு மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்கள் பயந்து செயற்பட்டனர். மோசடிகளுக்கு எதிராக போராட்டங்கள் மூலமே தீர்வுகளை காணமுடியும்.

கசிப்பு விற்பனை செய்தாவது பாராளுமன்றத்திற்குள் வரும் பலர் பொது மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை. இந்த நிலையில், போராட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டு நிராயுதபானியான விடுதலை என பெயரிட வேண்டும்.

அத்துடன், இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறான நிலையிலேயே நாட்டில் மோசடியற்ற நிலையை கொண்டுவர முடியும்.

தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் அவசரமாக கொண்டுவரகூடிய விடயமல்ல. அது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது.

எனினும் தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading