World

மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல பாடகி!

பிரபல பாடகியொருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த பிரபல பாடகியான சயாகா கன்டா(Sayaka Kanda) என்பவரே கடந்த சனிக்கிழமையன்று  இவ்வாறு தான் தங்கியிருந்த ஹோட்டலின் 6ஆவது மாடியில் இருந்து குதித்து  தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்சுடா சீகோ என்ற பிரபல பாடகரின் மகளான  இவர், சம்பவ தினத்தன்று சப்போரோ திரையரங்கில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் அவரைக்காண ரசிகர்கள் பலர் ஆவலுடன் அங்கு  காத்திருந்ததாகவும்  கூறப்படுகின்றது.

எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வருகை தராததால், அவரைத் தொடர்பு  கொள்ள குறித்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்த நிறுவனம் முயற்சி செய்துள்ளது.

இதன்போதே  சயாகா கன்டா, தங்கியிருந்த ஹோட்டலின் 6-ஆவது மாடியிலிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளமை  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று பார்த்த போது அங்குள்ள  நீச்சல் குளத்தில் அவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading