Local

மாணவர்களுக்கு வைரஸ் தொற்றியதால் பாடசாலை மூடப்பட்டது

ஶ்ரீபாத கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் ! 3ஆம் திகதிவரை கல்லூரி மூடப்பட்டது!!
பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன
நேற்று 29.01.2020 சுமார் 100 பேரும் இன்று 30.01.2020 சுமார் 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கள் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading