Local

மாறுகின்றது வறட்சி! வருகின்றது மழை!!

நாட்டில் நிலவிய கடும் வறட்சியுடனான காலநிலை இன்று முதல் மாற்றமடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், மத்திய, சப்ரகமுவ, ஆகிய மாகாணங்களிலும் காலி ,மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழைபெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் வறட்சியினால் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 8 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் வறட்சி நிலவியதால் ஆறுகள், குளங்களின் நீர்மட்டம் சடுதியாகக் குறைவடைந்துள்ளதுடன், தாவரங்களும் செத்து மடிந்தன. விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading