LocalUp Country

மாறுவேடமிட்டுசென்று மோசடியாளர்களை பிடித்த மஹியங்கனைப் பொலிஸார்!

7 போலி கஜமுத்துக்களை ஒன்றரைக் கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர், மஹியங்கனைப் பொலிசாரினால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி கஜமுத்துக்கள் குறித்து, மகியங்கனைப் பொலிசாருக்கு தகவல்கள் கிடைக்கவே, பொலிசார் மாற்றுடையில், கஜமுத்துக்களை கொள்வனவு செய்பவர்கள் போன்று, கஜமுத்துக்கள் விற்பனை செய்பவர்களிடம் சென்றனர்.

அங்கு மாற்றுடையில் சென்றிருந்த பொலிசார், கஜமுத்துக்களை விலைபேசி, பணத்தைக் கொடுக்கும் போது, கஜமுத்துக்களை விற்பனை செய்த இருவரை, குறிப்பிட்ட கஜமுத்துக்களுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர், மஹியங்கனை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, பொலிசார் தெரிவித்தனர்.

பதுளை நிருபர் – செல்வராஜ்

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading