Local

மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதி!

6 மாத காலத்திற்கு 100 மெகா வோல்ட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) அனுமதி வழங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 3 முக்கிய நிபந்தனைகளின் கீழ் 2023 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த 3 நிபந்தனைகள் பின்வருமாறு

1. கொள்முதல் தகுதியின் அடிப்படையில் குறித்த மின்சாரம் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்பதோடு, மின்சார கொள்முதல் ஒப்பந்த காலத்தின் முடிவில் கொள்முதல் பற்றிய சுயாதீன தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. கொத்மலை பொல்பிட்டிய 220 kv மின் அமைப்பை 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் செயற்படுத்த வேண்டும்.

3. இந்த மின்சார கொள்முதல் குறைந்தபட்ச செலவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading