Local

மீண்டும் ஊரடங்கு சட்டம்?

எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியில் தற்காலிகமாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் 3ஆம் திகதியும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், எதிர்வரும் 3ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கான எந்தவொரு தீர்மானமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading