Local

மீலாத் தினத்தை முன்னிட்டு: சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் மரங்கள் நட்டி வைப்பு!

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் மீலாத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (28) வியாழக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரங்களை நட்டி வைத்தார்.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் ஏ.எம். பர்ஹான், ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளர் ஐ.எல்.எம்.மன்சூர், உப செயலாளர் ஏ. அஹமட்லெப்பை, மரைக்காயர்மார்களான ஏ.ஏ.மஜீட், ஏ.சீ. முஹம்மட், எம்.எஸ்.றௌசூக், யூ.எல்.ஏ. வாஹிது, ஜும்ஆப் பள்ளிவாசலின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றசீட், அதன் கணக்காய்வாளர் யூ.எல். அபுல்ஹஸன் உட்பட பலரும் கலந்து கொண்டு மரங்களை நட்டி வைத்தனர்.

இதன்போது சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதியினால் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading