World

முகத்தில் 118 தையல் 3 பேர் கொண்ட கும்பலை எதிர்த்து நின்ற வீரப் பெண்மணி!

இந்தியாவில், பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக தாக்க வந்த கும்பலிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் முயர்ச்சியில், முகத்தில் 118 தையல்கள் போடும் அளவிற்கு ஏகப்பட்ட வெட்டுக்களை வாங்கியுள்ளார்.

இந்த சம்பவம் மத்தியப் பிரதேசம் மாநிலம், போபாலில் TT நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்தது.

டிடி நகர் ரோஷன்புராவில் உள்ள ஸ்ரீ பேலஸ் ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமையன்று அந்தப் பெண் தனது கணவருடன் சென்றபோது, ​​பைக் பார்க்கிங் தொடர்பாக அவருக்கும் 3 ஆண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவர் ஹோட்டலுக்குள் இருந்தபோது, ​​அவர்கள் ஆபாசமான கருத்துக்களை கூறி விசில் அடித்தனர். அந்த பெண் தனியாக அந்த கும்பலை எதிர்கொண்டார், அப்போது அவர்கள் அப்பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கியதால், மூன்று ஆண்களில் ஒருவரை அவர் அறைந்துள்ளார். பின்னர் அவர் தனது கணவருடன் ஹோட்டலுக்குள் சென்றார்.

தம்பதியினர் ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது, ​​​​அப்பெண்ணின் மீது பயங்கர கோபத்தில் இருந்த மூவரும், பேப்பர் கட்டர் மூலம் அவரைத் தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரது கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அங்கு மருத்துவர்கள் பலத்த காயங்களுக்கு சிகிச்சை அளிக்க அறுவை சிகிச்சை செய்தனர்.

இந்த சம்பவத்தில், இரண்டு குற்றவாளிகள் – பாட்ஷா பெக் மற்றும் அஜய் என்ற பிட்டி சிப்டே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது குற்றவாளியைப் பிடிக்க தேடுதல் நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இன்று காலை தம்பதியரை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு முழு உதவி செய்வதாக உறுதியளித்தார்.

சௌஹான் அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி அவருக்கு ரூ.1 லட்சத்தை வழங்கினார். அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் என முதல்வர் கூறினார்.

மேலும், “குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading