Lead News

முடிவுக்கு வரும் காகிதப் பணம்! ஆபத்தில் உலகம்!!

உலகளாவிய நிதி அமைப்பில் எவரும் அறியா வகையில் அமைதியாக ஒரு பூகம்பம் வெடித்துக்கொண்டிருக்கிறது.

நாம் பயன்படுத்தும் காகிதப் பணத்தின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. உலகின் 74% நாடுகளான 146 நாடுகள், காகிதப் பணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மத்திய வங்கிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் CBDC (Central Bank Digital Currency) எனப்படும் டிஜிட்டல் நாணயங்களை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

மேலோட்டமாகப் பார்த்தால் இது வெறும் “டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான நவீன தொழில்நுட்பம்” போலத் தெரியும். ஆனால், இதன் பின்னால் மனித வரலாற்றின் மிகப்பயங்கரமான நிதிக் கண்காணிப்பு மற்றும் முழுமையான கட்டுப்பாட்டுத் திட்டம் (Total Control & Surveillance State) மறைந்துள்ளது.

முதலில் CBDC என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இது நாம் தற்போது பயன்படுத்தும் Google pay , Apple Pay, அல்லது Cryptocurrency (Bitcoin) போன்றது அல்ல.

Cryptocurrency என்பது எந்தவொரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாத, பரவலாக்கப்பட்ட (Decentralized) சுதந்திரமான பணம்.

ஆனால் CBDC என்பது முற்றிலும் மாறுபட்டது. இது நேரடியாக அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளால் (Central Banks) உருவாக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் digital பணமாகும்.

இந்த digital பணம் உங்கள் வாலட்டில் இருக்கும் பணத்தை போல் காகித வடிவில் இருக்காது, அதற்கு பதிலாக மத்திய வங்கியின் Digital Serverல் உங்களுக்கென ஒரு கணக்கு இருக்கும்.

காகிதப் பணத்தில் இருக்கும் அநாமதேயத் தன்மை (Anonymity – அதாவது யாரிடம் பணம் கொடுக்கிறோம் என்ற விவரம் வெளியே தெரியாதது) இந்த CBDC-யில் சுத்தமாக இருக்காது.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு டிஜிட்டல் தடயம் (Digital Trail) அரசாங்கத்தின் மையக் கணினியில் பதிவாகிக்கொண்டே இருக்கும்.

தற்போது உலகின் 74% நாடுகளான 146 நாடுகள் (மொத்தமுள்ள 195 நாடுகளில்), காகிதப் பணத்தை முழுமையாக ஒழித்துவிட்டு,தங்களின் டிஜிட்டல் பணத்தை (Programmable Digital Money / CBDC) கொண்டுவர ரகசியமாகத் திட்டமிட்டு களமிறங்கியுள்ளன.

இதில் மூன்று நாடுகள் ஏற்கனவே இதனை முழுமையாகச் செயல்படுத்தியும் விட்டன!

CBDC முறையின் மிக ஆபத்தான அம்சம் என்னவெனில் பணம் “காலாவதியாகும் தன்மை”.

காகிதப் பணமாக இருந்தால், அதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பெட்டியிலோ அல்லது வங்கி lockerலோ பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம்.அதற்கு காலாவதி தேதியே கிடையாது.

ஆனால், மத்திய வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் பணத்தில் (CBDC) “Fixed Expiry”அல்லது “Demurrage” போன்ற கட்டுப்பாடுகளை எளிதாகக் கொண்டுவர முடியும்.

இதன் மூலம் அரசாங்கங்கள் என்ன சாதிக்க நினைக்கின்றன என்றால் மக்கள் பணத்தைச் சேமிக்காமல், உடனடியாகச் செலவழித்து பொருளாதாரத்தை வேகமாகச் சுழலச் செய்ய வேண்டும் என்ற பெயரில், சேமிக்கும் பணத்திற்கு அபராதம் அல்லது காலாவதி முறையைக் கொண்டு வருகிறார்கள்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைச் செலவழிக்காவிட்டால், மீதமுள்ள தொகை அரசாங்கத்தின் கணக்கிற்குத் திரும்பிவிடும் அல்லது மதிப்பு இழந்துவிடும்.

இதனால் மக்கள் எப்போதுமே அரசாங்கம் அனுமதிக்கும் பொருட்களையும் சேவைகளையும் மட்டுமே வாங்கிக் குவிக்க வேண்டிய கட்டாய அடிமைத் தளத்திற்குத் தள்ளப்படுவார்கள்.

உலகின் முதல் பெரிய பொருளாதார நாடான சீனா, தனது டிஜிட்டல் நாணயத்தில் ‘காலாவதியாகும் முறைமையை’ வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.

அதாவது, “வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தத் தொகையை நீங்கள் செலவழித்தே ஆக வேண்டும்; இல்லையெனில் அது காலாவதியாகிவிடும்” என்று உத்தரவிடலாம். இதனால் மக்கள் தங்களது பணத்தைச் சேமிக்க முடியாது; அரசாங்கம் விரும்புவதை வாங்கியே தீர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள்.

மக்கள் பணத்தை முடக்கி வைக்காமல் உடனடியாகச் செலவழிக்க வேண்டும் என்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்படவிருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் ரூபாயில், குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே (Conditional Payments) பணத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் உட்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கும் உர மானியப் பணம், வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாதவாறு ‘பூட்டப்பட்டே’ (Locked) வழங்கப்படுகிறது.

அரசாங்கங்கள் இதற்குக் கூறும் காரணம் – “கறுப்புப் பண ஒழிப்பு, ஊழல் தடுப்பு மற்றும் விரைவான பரிமாற்றங்கள்”. ஆனால், இது உலகைக் கட்டுப்படுத்த நினைக்கும் சக்தி வாய்ந்த அமைப்புகளின் (Global Elite / Central Authorities) மறைமுக அஜெண்டா ஆகும். இதன் உண்மையான நோக்கங்கள் பின்வருமாறு.

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புகளின் உயர் அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளபடி, CBDC வந்தால் மத்திய வங்கியால் அந்தப் பணத்தின் பயன்பாடு குறித்த விதிகளை “நிரலாக்கம்” (Programmable Money) செய்ய முடியும்.

அதாவது, உங்கள் பணத்தை எங்கு செலவழிக்க வேண்டும், எங்கு செலவழிக்கக் கூடாது என்பதை அரசாங்கக் குறியீடுகளே (Code) தீர்மானிக்கும்.

உங்கள் உடல்நலம், சுற்றுச்சூழல் அல்லது அரசியல் காரணங்களைக் காட்டி உங்கள் வாங்கும் திறனை அரசாங்கம் தடுத்து நிறுத்தலாம்.

உதாரணமாக உங்கள் (Carbon Footprint) அதிகமாகிவிட்டது என்று கூறி, ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கு மேல் உங்களால் விமானப் பயணச் சீட்டோ அல்லது பெட்ரோலோ வாங்க முடியாது என உங்கள் பணத்தை முடக்கலாம்.

இது ஏதோ ஹாலிவுட் Sci-Fi படம் அல்ல. Netflix க்ஸின் Black Mirror தொடரில் வருவது போல நிஜமாகவே நடக்கத் தொடங்கிவிட்டது.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு cup of coffee , நீங்கள் செல்லும் ஒவ்வொரு பயணம், உங்கள் ஒவ்வொரு செலவையும் அரசாங்கத்தின் ஒரு Central Server கழுகுப் பார்வை போல் கண்காணிக்கும்.

அரசாங்கத்தின் கொள்கைகளையோ அல்லது சட்டங்களையோ நீங்கள் எதிர்த்துப் போராடினால், உங்கள் வாடகைப்பணத்தைச் செலுத்தவிடாமல் அல்லது உங்கள் கணக்கையே ஒட்டுமொத்தமாக முடக்க அவர்களால் ஒரே கிளிக்கில் முடியும்.

எதிர்காலத்தில் காகிதப் பணம் முழுமையாக அழிக்கப்பட்டு, CBDC மட்டுமே நடைமுறைக்கு வந்தால் பின்வரும் விளைவுகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.

உங்கள் அந்தரங்கம் (Privacy) என்பது நிதித்துறையில் எஞ்சியிருக்காது. நீங்கள் எதைச் சாப்பிடுகிறீர்கள், எங்கு பயணம் செய்கிறீர்கள், யாருக்கு உதவுகிறீர்கள் என்பது வரை எல்லாமே அரசாங்கத்தின் கண்காணிப்புத் திரையில் அப்பட்டமாக தெரியும்.

அரசாங்கத்தின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள், சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சிப்பவர்கள் உடனடியாக ‘பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்படலாம்’. ஒரே ஒரு பட்டினை அழுத்துவதன் மூலம் ஒரு குடிமகனின் ஒட்டுமொத்த பணத்தையும் zero ஆக்க முடியும்.

சாதாரண வங்கிகளில் பிரச்சனை என்றால் மக்கள் உடனே பணத்தை எடுத்து காகிதப் பணமாக மாற்றுவார்கள் (Bank Run). ஆனால், டிஜிட்டல் உலகில் எங்கு சென்றாலும் அரசாங்கத்தின் கணினிதான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதால், உங்களால் தப்பிக்கவே முடியாது.

உலகம் முழுவதும் உள்ள 146 நாடுகளைச் சேர்ந்த 74% அரசாங்கங்கள் காகிதப் பணத்தை முழுமையாக ஒழித்துவிட்டு, தங்களது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் CBDC (Central Bank Digital Currency) எனப்படும் டிஜிட்டல் பணத்தை (Programmable Money) நோக்கி மந்தை போல விரட்டப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த ஒட்டுமொத்த உலகளாவிய கட்டுப்பாட்டு வலையமைப்பையும் (Global Control Grid) ஏற்க மறுத்து, தங்களது தனித்துவமான தேசிய இறையாண்மையைக் காப்பாற்ற முயலும் ஒரு சில நாடுகளின் மீதுதான் இப்போது ஆளும் வர்க்கத்தின் (Global Elites & Central Authorities) நேரடி மற்றும் மறைமுகப் போர்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த உலகளாவிய நிதி அமைப்பிற்குள் வர மறுக்கும் நாடுகளை ஆளும் வர்க்கத்தினர் வெறும் “நாடுகள்” என்று பார்ப்பதில்லை; மாறாக, தங்களது முழுமையான கட்டுப்பாட்டைத் தகர்க்கும் “கசிவுகள்” (Leakages / Systemic Vulnerabilities) என்று கருதுகிறார்கள்.

இந்த நிழல் உலக அரசியலின் கோர முகத்தை அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading