முதலைக்கு இரையாகும் முதலைகள்!!
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள களப்பில் நபர் ஒருவர் மேலும் மூன்று பேருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதலை களப்பிலிருந்து வெளிவந்து அந்த நபரைப் பிடித்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள களப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை முதலை இழுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
முதலைக்கு இரையான நபரைக் கண்டுபிடிக்க காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கடற்படை தலைமையகம் மற்றும் கஜுவத்த கடற்படை தளத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment.